உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இயற்கை கலுங்கு பொங்கல் விழா

இயற்கை கலுங்கு பொங்கல் விழா

மதுரை : மதுரை செல்லுார் கண்மாயில் நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தலைவர் அபுபக்கர் தலைமையில் இயற்கை கலுங்கு பொங்கல் நிகழ்ச்சி நடந்தது.சங்கரபாண்டியன், சம்சுதீன், ஷகீல்கான் முன்னிலை வகித்தனர். டாக்டர் சரவணன், பேராசிரியர் நாகரத்தினம் பேசினார். நீர்நிலைகள் நிரம்பி, விவசாயம் செழித்து, நாடுவளம் பெற வேண்டும் என்ற வேண்டுதலுடன் பொங்கல் வைக்கப்பட்டது.கவுன்சிலர் மாணிக்கம், மக்கள் சட்ட உரிமை இயக்கம் அண்ணாத்துரை, வைகைநதி மக்கள் இயக்கம் ராஜன், வழிகாட்டி மனிதர்கள் தலைவர் மணிகண்டன், கலாம் அறக்கட்டளை ஜெயக்குமார் பங்கேற்றனர். ஜாகீர்பாட்ஷா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை