உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  தி.மு.க., அரசுக்கு எதிராக போராட செவிலியர்கள் முடிவு

 தி.மு.க., அரசுக்கு எதிராக போராட செவிலியர்கள் முடிவு

மதுரை: 'தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தி.மு.க., அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்த' செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் முடிவு செய்துள்ளது. மதுரையில் இச்சங்க மாநில செயற்குழு கூட்டம், துணை தலைவர் சுஜாதா தலைமையில் நடந்தது. பொது செயலாளர் சுபின் கூறியதாவது: தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆட்சிக்கு வந்தால் தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வதாக தெரிவித்தனர். ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளாகியும் 8 ஆயிரம் பேர் பணி நிரந்தரத்திற்காக காத்திருக்கின்றனர். மருத்துவத் துறையில் காலி பணியிடங்களே இல்லை என அமைச்சர் சுப்பிரமணியன் தவறாக கூறுகிறார். டாக்டர், செவிலியர் பணியிடங்கள் நோயாளிகளுக்கு ஏற்ப உருவாக்கப்படவில்லை. சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில், நிரந்தர செவிலியர்களுக்கு இணையான ஊதியத்தை தொகுப்பூதிய செவிலியர்களுக்கும் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற அரசுக்கு மனம் இல்லை என்பதையே காட்டுகிறது. எனவே டிச.4ல் அரசு ஊழியர் சங்க மறியல்,டிச. 13ல் ஜாக்டோ - ஜியோவின் உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டங்களில் பங்கெடுப்பது. டிச. 18ல் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது, டிச. 27ல் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு, 202 6 ஜன. 6ல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது என முடிவெடுத்துள்ளோம் என்றார். சங்கத் தலைவர் சசிகலா, பொருளாளர் ஹேமச்சந்திரன், அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் நீதிராஜன், மாவட்ட தலைவர் தமிழ் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை