உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  கடையில் பெட்ரோல் விற்பனை கண்டுகொள்ளாத அதிகாரிகள்

 கடையில் பெட்ரோல் விற்பனை கண்டுகொள்ளாத அதிகாரிகள்

பேரையூர்: பேரையூர் தாலுகாவில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இங்கு நாற்றுக்கணக்கான கிராமங்கள் உள்ளன. நவீன தொழில்நுட்பத்தால் விவசாயம் இயந்திர மயமாக்கப்பட்ட நிலையில் நாள் தோறும் பெட்ரோல், டீசல் தேவை அத்தியாவசிய பொருளாக மாறி உள்ளது. இத்தாலுகாவில் நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சில கிராமங்களில் டீக்கடை, பெட்டிக்கடை, பலசரக்கு கடைகளில் பாதுகாப்பற்ற நிலையில் பெட்ரோல், டீசல் விற்கப்படுகின்றன. விற்கப்படும் டீசல், பெட்ரோல் எளிதில் தீப்பற்றி எரியக்கூடிய நிலையில் வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கு ஆபத்து காத்திருக்கிறது. மேலும் அளவு குறைவதுடன் கலப்படம் சேர்வதால் கூடுதல் விலையில் இவை விற்கப்படுகின்றன. இதை கண்காணிக்க வேண்டிய எரிபொருள் எண்ணெய் நிறுவனங்கள் இவற்றை ஒரு பொருட்டாகவே கருத்தில் கொள்வதில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை