உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இறந்தவர் உடலை கல்லறையில் அடக்கம் செய்ய உத்தரவு

இறந்தவர் உடலை கல்லறையில் அடக்கம் செய்ய உத்தரவு

மதுரை : கன்னியாகுமரி மாவட்டம் மைலோடுவில் சிலரால் தாக்கப்பட்டு இறந்த சேவியர் குமார் உடலை அருகிலுள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.நாககுழிவிளை ஆல்வின் ஜோஸ் தாக்கல் செய்த மனு:மைலோடு செயின்ட் ஆதித்துாதர் சர்ச் நிர்வாக பொருளாளராக உள்ளேன். இதன் உறுப்பினர்களில் ஒருவரான சேவியர் குமார் மற்ற உறுப்பினர்களுடன் தேவையற்ற தகராறுகளில் ஈடுபட்டார். கருத்து வேறுபாட்டால் சேவியர் குமார் ஜன.,20 ல் சிலரால் தாக்கப்பட்டார். இதில் அவர் இறந்தார். இரணியல் போலீசார் வழக்கு பதிந்தனர்.இப்பிரச்னை இருதரப்பினர் இடையிலானது. சர்ச் நிர்வாகத்திற்கும் சம்பவத்திற்கும் தொடர்பில்லை. ஆனால் இச்சூழ்நிலையை பயன்படுத்தி சிலர் கிராமத்தில் பிரச்னையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.சர்ச் வளாகத்திற்குள் சேவியர் குமாரின் உடலை அடக்கம் செய்ய முயற்சிக்கின்றனர். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கிராம பொது மயானத்தில் உடலை அடக்கம் செய்வதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. சர்ச் வளாகத்தில் உடலை அடக்கம் செய்ய யாருக்கும் அனுமதி இல்லை. உடலை குறிப்பிட்ட கல்லறை மைதானத்தில் அடக்கம் செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.அருகிலுள்ள கல்லறை தோட்டத்தில் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என நீதிபதி வி.பவானி சுப்பராயன் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை