உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சின்மயா மிஷனில் பல்சுவை முகாம்

சின்மயா மிஷனில் பல்சுவை முகாம்

மதுரை : உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மதுரை சின்மயா மிஷன் தேவி குழுவினர் சார்பில் பெண்களுக்கான பல்சுவை முகாம் நடந்தது.சுவாமி சிவயோகானந்தா துவக்கி வைத்தார். அவர் எழுதிய பகவத் கீதை, ஞானச்சுடர், தினமலர் நாளிதழின் ஆன்மிக கட்டுரைத் தொகுப்புகள் அடங்கிய 'வாழ்ந்து காட்டுவோம் வாருங்கள்' ஆகிய நுால்களை எல்.எஸ். மில்ஸ் நிறுவனர் சாந்தி வெளியிட்டார்.திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லுாரி ஆய்வாளர் கபிலா விசாலாட்சி அறம் செய்ய விரும்பு தலைப்பில் பேசுகையில், ''மனதை துாய்மையாக வைத்திருப்பதே அறம். எல்லோரும் நலமுடன் இருக்க வேண்டும் என மனம் நினைத்தால் அதுவே அறம். அறம் இருந்தால் வாழ்வில் புகழ், செல்வம் தானாக வரும்'' என்றார்.நமது கலாசாரமும் பாரம்பரியமும் பாதுகாக்கப்படுகிறதா என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. பொன்மீரா விவேக் போஸ் நடுவராகவும், செந்தமிழ்க் கல்லுாரி துணைமுதல்வர், ரேவதி சுப்புலட்சுமி, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் லட்சுமி பன்ஸிதர், எம்.டி., கம்யூனிட்டி கிச்சன் நிறுவன இயக்குனர் பவானி வேல், செவன் க்ளவர் நிறுவனர் ஷர்மிளா தேவி பங்கேற்றனர். கோலம் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு பாலகோபாலன் ஜூவல்லரி நிர்வாக இயக்குனர் செந்தில்குமார் பரிசு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை