மேலும் செய்திகள்
அரசியல் கேள்விகள் கேட்காதீங்க... மதுரையில் வைகோ டென்ஷன்
10 minutes ago
ரயில் மோதியதில் கை துண்டான மாணவி பலி
1 hour(s) ago
மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
1 hour(s) ago
மதுரை: மதுரையில் 68 வயது மனைவியை கொலை செய்த 73 வயது கணவர் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மதுரை நாகமலைபுதுக்கோட்டை சர்வோதயா நகரை சேர்ந்தவர் கந்தசாமி 73. மனைவி யோகாம்பிகை 68. மகன் சசிகுமாருடன் இருவரும் வசித்தனர். மகள் மணிமேகலை திருமணமாகி பக்கத்து தெருவில் குடியிருக்கிறார். நேற்று காலை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, தாய் வீட்டிற்கு மணிமேகலை வந்தார். அப்போது கதவு பூட்டியிருந்தது. தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியே பார்த்தபோது கந்தசாமி துாக்கிட்ட நிலையில் இருந்தார். அதிர்ச்சியான மணிமேகலை அருகில் உள்ளவர்களை அழைத்து கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது கந்தசாமிக்கு பக்கத்து அறையில் யோகாம்பிகை தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவருக்கு கழுத்திலும் காயம் இருந்தது. பக்கத்தில் கடப்பாறை கம்பியும் கிடந்தது. இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். மோப்ப நாய் வர வைத்தும் சோதனை செய்யப்பட்டது. போலீசார் கூறுகையில், மகன் வெளியூர் சென்றிருந்த நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது. முதலில் யோகாம்பிகையை கடப்பாறையால் தாக்கி கொலை செய்துவிட்டு, கந்தசாமியும் தற்கொலை செய்திருக்கலாம். குடும்பத் தகராறு காரணமாக நடந்துள்ளதா என்ற கோணத்தில் முதற்கட்ட விசாரணை நடக்கிறது. மகன், மகள் ஆகியோரிடமும் விசாரணை நடதத்தப்படும் என்றனர்.
10 minutes ago
1 hour(s) ago
1 hour(s) ago