உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  போலீஸ் செய்திகள்

 போலீஸ் செய்திகள்

கபடி வீரர் கொலையில் 6 பேர் கைது மேலுார்: வெள்ளரிப்பட்டி கபடி வீரர் மருதுபாண்டி 22. நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வெள்ளரிப்பட்டி மலை நகர் விஸ்வா 23, பூமிநாதன் 20, முத்துவேல் 23, சிவபாலன் 22, முனீஸ்வரன் 29, மலைச்சாமி 18, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 15 நாட்களுக்கு முன் கபடி போட்டியில் மருதுபாண்டிக்கும் மற்றவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. நவ.,15ல் நண்பர்கள் 6 பேரும் மருதுபாண்டியுடன் சேர்ந்து மது அருந்திய போது தகராறு முற்றவே கம்பு, கல்லால் தாக்கி கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். பாட்டிலால் குத்தியவர் கைது வாடிப்பட்டி: சமயநல்லுார் பர்மா காலனி சிதம்பரம் மகன் முருகேசன் 33. நேற்று முன்தினம் மாலை தோடனேரி அருகே கண்மாய் ரோட்டில் ஆடு மேய்த்தார். அங்கு மது போதையில் வந்த காந்திநகர் அருண்குமார் 22, மது வாங்கி தரக்கூறி மிரட்டினார். மறுத்ததால் பாட்டிலை உடைத்து மார்பு மற்றும் கையில் குத்தியதில் காயமடைந்த முருகேசன் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். தடுத்த முருகேசனின் உறவினர் அழகு முத்துப்பாண்டியையும் மிரட்டினார். அருண்குமாரை சமயநல்லுார் போலீசார் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே இதே போன்ற வழக்கு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி