உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 2 மாதம் சம்பளம் வழங்காததால் மதுரை பல்கலையில் போராட்டம்

2 மாதம் சம்பளம் வழங்காததால் மதுரை பல்கலையில் போராட்டம்

மதுரை, :மதுரை காமராஜ் பல்கலையில் நிதி நெருக்கடி, பணி நியமனம், சம்பள நிர்ணயம், பதவி உயர்வு உள்ளிட்டவற்றில் நீடிக்கும் ஆடிட் அப்ஜெக் ஷன்கள், அதற்கு தீர்வு காணாததால், மாநில அரசு மானியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. 1,200க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியமும் கிடைக்கவில்லை.இது தொடர்பாக, பதிவாளர் ராமகிருஷ்ணன், துணைவேந்தர் குமார் ஆகியோருடன் அலுவலர்கள், ஓய்வூதியர் சங்க பிரதிநிதிகள் நடத்திய பலகட்ட பேச்சு தோல்வியில் முடிந்தது. இதையடுத்து இந்த உள்ளிருப்பு போராட்டம் துவங்கியது.போராட்டத்தில் ஈடுபட்டோர் கூறுகையில், 'சம்பளம் வழங்க துணைவேந்தர் நடவடிக்கை எடுக்கவில்லை. இரண்டு மாதங்களாக சம்பளம் இன்றி அலுவலர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதித்துள்ளது. ஓய்வூதியர்கள் நிலை மிக மோசமாக உள்ளது. சம்பளம் வழங்கும் வரை இப்போராட்டம் தினமும் தொடரும்' என்றனர்.போராட்டத்தால் துணைவேந்தர், பதிவாளர், தேர்வாணையர் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்களும் மூடப்பட்டன. கல்லுாரி பருவத் தேர்வுகள் முடிந்த நிலையில் அதற்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் நடந்தன. போராட்டம் காரணமாக திருத்தும் மையங்களும் மூடப்பட்டதால் பணிக்கு வந்த பேராசிரியர்கள் திரும்பிச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி