உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயில் கும்பாபிஷேகத்திற்கு தடை கோரிய வழக்கு; கோயில் வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றம்

சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயில் கும்பாபிஷேகத்திற்கு தடை கோரிய வழக்கு; கோயில் வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றம்

மதுரை : தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயில் கும்பாபி ேஷகத்திற்கு தடை கோரிய வழக்கின் விசாரணையை கோயில்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் அமர்விற்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.சங்கரன்கோவில் அகில பாரத ஐயப்ப சேவா சங்க கிளை தலைவர் சுப்பிரமணியன் தாக்கல் செய்த பொது நல மனு:சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் சைவம், வைணவத்தை குறிக்கும் ஒரே தலம். சைவத்தின் முதன்மைக் கடவுளான சிவபெருமான், வைணவத்தின் உயர்ந்த கடவுளான விஷ்ணு 'சங்கரநாராயணர்' என்ற பெயருடன் ஒரே சிலையில் இணைந்துள்ளனர். இது ஹிந்து மதத்தின் சைவம், வைணவத்தின் ஒற்றுமையை குறிக்கிறது. இக்கோயில் கி.பி., 10 ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது. இங்கு ஆக.,23 ல் கும்பாபி ேஷகம் நடக்கிறது.கோயில் ராஜகோபுரம் 5 வண்ணங்களால் (பஞ்சவர்ணம்) ஆனது. 1979, 1998ல் நடந்த கும்பாபிேஷகத்தின்போது ஒரே வண்ணம் பூசப்பட்டது. இம்முறை 5 வண்ணங்கள் பூச கோரிக்கை விடுத்தோம். அறநிலையத்துறை நிராகரித்தது.கும்பாபி ேஷகத்திற்கு திருப்பணிக்குழு அமைக்கவில்லை. கோயிலில் பல சிற்பங்கள் சேதமடைந்துள்ளன. சமீபத்தில் பெய்த மழையின் போது, கோயிலில் நீர் கசிவு ஏற்பட்டது. அரசியல் செல்வாக்குடைய நன்கொடையாளர்களை திருப்திப்படுத்தும் நோக்கில் அவசரகதியில் கும்பாபிேஷகம் நடத்த உள்ளனர்.திருப்பணி முழுமையாக முடிந்த பின் கும்பாபி ேஷகம் நடத்த வேண்டும். அதுவரை கும்பாபி ேஷகத்திற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு: இதை கோயில்கள் தொடர்பான வழக்குகளை கையாளும் நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறையை மனுதாரர் தரப்பு நாடலாம். இவ்வாறு உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ