உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  சிப்காட்டை ரத்து செய்ய வேண்டும்: பிரேமலதா

 சிப்காட்டை ரத்து செய்ய வேண்டும்: பிரேமலதா

மேலூர்:மேலூரில் தே.மு.தி.க., சார்பில் ரத யாத்திரை மற்றும் உள்ளம் தேடி இல்லம் நாடி மக்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. நகர் செயலாளர் சரவணன் வரவேற்றார். வடக்கு மாவட்ட செயலாளர் பாலசந்தர் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஆண்டிச்சாமி, சண்முகராஜா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் பொது செயலாளர் பிரேமலதா பேசியதாவது : 2026 தேர்தலில் நீங்கள் விரும்பும் கூட்டணியை தே.மு.தி.க., அமைக்கும். 63 ஆயிரம் ஓட்டு சாவடிக்கு கமிட்டி அமைத்துள்ளோம். மேலூர் காய்கறி மார்க்கெட் கடைகளுக்கு ஏலம் நடத்தி கடைகளை ஒதுக்கி தர வேண்டும். பூதமங்கலம், கொடுக்கம்பட்டி, வஞ்சிநகரம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்லங்காடு பகுதியில் சிப்காட் தொழிற்சாலை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதை ரத்து செய்ய வேண்டும். மேலும் இம் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மக்கள் விரும்பும் திட்டம் மட்டுமே வெற்றி பெறும். மக்கள் போராட்டத்திற்கு செவி சாய்க்காத தமிழக அரசை தே.மு.தி.க., வன்மையாக கண்டிக்கிறது. தமிழக அரசு மக்களின் போராட்டத்திற்கு செவிசாய்க்காமல் செவிடன் காதில் ஊதும் சங்கு போல் இருந்தால் 2026 தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவர் என்றார். மாநில பொருளாளர் சுதீஷ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை