| ADDED : நவ 23, 2025 04:05 AM
வாடிப்பட்டி: வாடிப்பட்டியில் பேரூர் அ.தி.மு.க., சார்பில் பூத் கமிட்டி, பாக பொறுப்பாளர்கள் பயிற்சி முகாம், ஆலோசனை கூட்டம் நடந்தது. பேரூர் செயலாளர் அசோக்குமார் தலைமை வகித்தார். சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் பேசியதாவது: தி.மு.க., கள்ள ஓட்டு போடுவதற்கு முடிவுரை எழுதுவது தான் இந்த எஸ்.ஐ.ஆர்.,பணி. அதனால் தான் அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்கின்றனர். அப்படிவத்தை பார்த்தால் தலை சுற்றுவதாக ஸ்டாலினும், படிவம் மிக எளிமையாக உள்ளது என அமைச்சர் நேருவும் கூறுகின்றனர். இதற்கு முரணாக தி.மு.க.,வினரோ 'உங்களுக்கு உதவ நாங்கள் ரெடி, நீங்க ரெடியா' என தெருத்தெருவாக அலைகின்றனர். தமிழக மக்களுக்கு ஒரு லட்சம் பட்டா வழங்க போவதாக அறிவிக்கின்றனர். ஏற்கனவே 525 வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஸ்டாலின் ஏமாற்றினார். தற்போது இவ்வாறு கூறி ஏமாற்றுகின்றனர். அதற்காகவே தி.மு.க., மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். தமிழக மக்களை வீதியில் நிற்க வைத்துவிட்டு 'ஈகோ'வால் மத்திய அரசு மீது பழி போடுவதிலும், மக்களை ஏமாற்றுவதிலும், பொய் சொல்லுவதிலும் ஸ்டாலின் அரசு உலக சாதனை படைத்துள்ளது என்றார். முன்னாள் எம்.எல்.ஏ., மாணிக்கம், ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், ஜெ., பேரவை மாநில துணைச் செயலாளர் ராஜேஷ் கண்ணா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.