உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  கெட்டுப்போன வெண்ணெயை ஆவின் திருப்பி அனுப்பியதாக தமிழக அமைச்சர் தகவல்

 கெட்டுப்போன வெண்ணெயை ஆவின் திருப்பி அனுப்பியதாக தமிழக அமைச்சர் தகவல்

மதுரை: ''மதுரை ஆவினுக்காக வடமாநிலத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட வெண்ணெயில் லேசான துர்நாற்றம் வந்ததால், திருப்பி அனுப்பப்பட்டது. பணம் செலுத்தாததால் ஆவினுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை,'' என, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார். மதுரையில் நேற்று அவர் கூறியதாவது: மதுரை, தேனி ஆவின் லாபத்தில் இயங்குகின்றன. மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்களுக்கு ஆண்டு முழுதும் பால் வழங்கியதை கணக்கில் கொண்டு லிட்டருக்கு கூடுதலாக, 1 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கியுள்ளோம். தீவனத்திற்கு ஒரு கிலோவிற்கு, 2 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. மதுரையில் பால் கொள்முதலை பொறுத்தவரை, 50,000 லிட்டர் அதிகரித்துள்ளது. மதுரை ஆவினுக்கு வடமாநிலத்தில் கொள்முதல் செய்யப்பட்ட வெண்ணெய் கெட்டுப்போனது குறித்து ஐ.ஏ.எஸ்., அதிகாரி உடனடியாக விசாரணை நடத்தினார். கொள்முதல் செய்த வெண்ணெயின் ஒரு பகுதியில் லேசான துர்நாற்றம் வந்ததால், சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது. அந்த வெண்ணெய்க்குரிய பணம் எதுவும் வழங்காததால் ஆவினுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை