| ADDED : நவ 26, 2025 05:10 AM
மதுரை: மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உள்ள கள்ளர் சீரமைப்புத்துறை பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் என கோரி தமிழ்நாடு மேல்நிலை முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது. இணை இயக்குநர் சுபாஷினியிடம் அளித்த மனு: கல்வித்துறை, மாநகராட்சி, ஆதிதிராவிடர் நலத்துறைக்கு உட்பட்ட பள்ளிகளில் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டது. அதேநேரம் மூன்று மாவட்டங்களில் உள்ள கள்ளர் பள்ளிகளில் 30 சதவீதம் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மாணவர்கள் தேர்ச்சி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இத்துறை ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தி காலிப்பணியடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்வு நிலை, சம்பள உயர்வு, பணிவரன்முறை, தகுதிகாண் பருவம் வேண்டி விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு உரிய உத்தரவு பிறப்பநிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன.