உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  வாரிசுகள் அடையாளத்திற்கு முன்னோர் செய்த தர்மமே அடிப்படை பாபாஜி ராஜா போன்ஸ்லே சத்ரபதி பேச்சு

 வாரிசுகள் அடையாளத்திற்கு முன்னோர் செய்த தர்மமே அடிப்படை பாபாஜி ராஜா போன்ஸ்லே சத்ரபதி பேச்சு

மதுரை: ''வாரிசுகள் அடையாளம் காணப்படுவதற்கு முன்னோர்கள் செய்த தர்மமே அடிப்படைக் காரணம்,'' என, மதுரையில் பாபாஜி ராஜா போன்ஸ்லே சத்ரபதி பேசினார். மதுரை கலைஞர் நுாற்றாண்டு நுாலகத்தில் எழுத்தாளர்கள் அனிதா ராஜராஜன், பிஸ்வஜித் பாலசுப்பிரமணியன் எழுதிய 'பிரம் ஹோம் டூ ஹார்ட் லேண்ட் : சவுராஷ்டிராக்களின் கதை' என்ற நுால் வெளியீட்டு விழா நடந்தது. பாபாஜி ராஜா போன்ஸ்லே சத்ரபதி தலைமை வகித்து பேசியதாவது: மதுரை பல்வேறு சமூகங்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் ஊர். சவுராஷ்டிரா மக்கள் எண்ணிக்கையில் சிறிய சமூகமாக இருந்தாலும், மனதளவில் பெரிய சமூகம். எங்கு வசித்தாலும் அந்த மண்ணை வளப்படுத்துவதில் சவுராஷ்டிரா சமூகத்தினர் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். தஞ்சையில் மராட்டிய மன்னர்களின் ஆட்சி முடிவிற்கு வந்து 150 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. ஆனால் இன்றளவும் மராத்திய மன்னர்களின் வாரிசுகள் அடையாளம் காணப்படுவதற்கு முன்னோர்களின் தர்மமே அடிப்படைக் காரணம். அடுத்தவர்களுக்கு உதவிசெய்யக்கூடிய ஒரு சமுதாயமாக சவுராஷ்டிரா சமுதாயம் விளங்குகிறது. தஞ்சை சரஸ்வதி மஹாலில் 300 ஆண்டு கால வரலாறு மறைந்து கிடக்கிறது. சோம்நாத்திலிருந்து மதுரைக்கு புலம்பெயர்ந்த மக்களின் வரலாறு குறித்து அறிய இந்நுால் உதவும் என்றார். தியாகராஜர் கல்லுாரி தலைவர் உமா கண்ணன், பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் சந்திரசேகர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி