உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / டிஸ்யூ பேப்பரில் வந்த கோரிக்கைக்கு நடவடிக்கை எடுத்த ரயில்வே அமைச்சர்

டிஸ்யூ பேப்பரில் வந்த கோரிக்கைக்கு நடவடிக்கை எடுத்த ரயில்வே அமைச்சர்

மதுரை : டிஸ்யூ பேப்பரில் வந்த கோரிக்கைக்கு அலட்சியப்படுத்தாமல் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உடனடியாக நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டுள்ளார்.கடந்த பிப்.2 ம்தேதி அக் ஷய் சட்னலிவாலா என்ற தொழிலதிபர் டில்லியில் இருந்து கொல்கத்தாவுக்கு செல்லும் விமானத்தில் பயணித்தார். அதே விமானத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பயணித்துள்ளார். இதனை அறிந்த அந்த தொழிலதிபர், உடனே கை துடைக்கும் 'டிஸ்யூ' பேப்பரில், அவரது கம்பெனியின் திடக்கழிவு பொருட்களை ரயில்மூலம் அனுப்ப உதவிட வேண்டும் என்று மனு கொடுத்தார்.இதையடுத்து அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், கிழக்கு ரயில்வே பொதுமேலாளரை அழைத்து உத்தரவுகளை பிறப்பித்தார். தொழிலதிபர் விமானத்தில் இருந்து கொல்கத்தாவில் இறங்குவதற்கு 6 நிமிடங்களுக்கு முன்பாகவே, கிழக்கு ரயில்வே பொதுமேலாளர் அலுவலகத்தில் இருந்து திடக்கழிவு பொருட்களை ரயில்மூலம் அனுப்புவது சம்பந்தமாக எப்போது ஆலோசிக்கலாம் என அலைபேசி வாயிலாக கேட்டுள்ளனர். அவரது விருப்பப்படி பிப்.6ல் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் கிழக்கு ரயில்வே பொதுமேலாளர் மிலின்ட் கே தேவேஸ்கர், தலைமை முதன்மை வர்த்தக மேலாளர் சவுமித்ரா மஜூம்தார், தலைமை முதன்மை ரயில் இயக்க மேலாளர் ஆர்.டி.மீனா, ஆகியோர் அத்தொழிலதிபருடன் ஆலோசனை நடத்தினர்.இதில், சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர், ஒடிசாவில் உள்ள ராஜ்கங்காபூர் மற்றும் இந்தியாவின் பிறபகுதிகளில் இருந்தும் திடக்கழிவுகளை ரயில்மூலம் அனுப்ப ஏற்பாடு செய்யம்படி வலியுறுத்தினர். இதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை உடனே மேற்கொள்வதாக ரயில்வே பொதுமேலாளர் உறுதியளித்தார். ரயில்மூலம் திடக்கழிவுகளை அப்புறப்படுத்துவதன் மூலம் மறுசுழற்சி விரைவாக நடக்கும். சுற்றுச்சூழல் பாதிப்பும் வெகுவாக குறையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை