உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உண்டியலில் ஆட்டை போட்டு கோவிலிலே துாங்கிய திருடன்

உண்டியலில் ஆட்டை போட்டு கோவிலிலே துாங்கிய திருடன்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குள் நேற்று முன்தினம் இரவு மறைந்திருந்து உண்டியலில் பணம் திருடியவர், கோவிலுக்குள் மெய் மறந்து அசந்து துாங்கிய நிலையில், நேற்று அதிகாலை, கோவில் பணியாளர்கள் அவரை பிடித்தனர்.மதுரை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று அதிகாலை வழக்கம் போல பரிஜாதகர் சுவாமிநாதன் பரிவார தெய்வங்களுக்கு தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்தார். சண்முகர் சன்னிதியிலுள்ள பரிவார தெய்வங்களுக்கு அவர் அபிஷேகம் செய்ய சென்றபோது, அங்கு துாணுக்கு பின்புறம் ஒருவர் படுத்திருந்தார். அவரது அருகில் பையில் பணம் இருந்தது. அவரை எழுப்பிய போது அவர் பணப்பையுடன் ஓடினார். சுவாமிநாதன் சத்தம் போடவே, மர்ம நபரை கோவில் பணியாளர்கள் பிடித்து, கோவில் துணை கமிஷனர் சுரேஷிற்கு தகவல் தெரிவித்தனர். திருப்பரங்குன்றம் போலீசில் மர்ம நபர் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் விசாரித்தனர்.அவர், திருநகர் நெல்லையப்பபுரம் மணி, 45; மைக் செட் ஆப்பரேட்டர் என்பது தெரிந்தது. அவரிடம் இருந்து உண்டியல் பணம், 18,500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை