உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  தென்கரையில் நாளை ஆராட்டு விழா

 தென்கரையில் நாளை ஆராட்டு விழா

சோழவந்தான்: சோழவந்தான் அருகே தென்கரையில் நாளை (நவ.26) ஐயப்பன் கோயில் சார்பில் வைகையில் ஆராட்டு விழா நடக்கிறது. காலை 7:00 மணிக்கு விநாயகர் பூஜை, புண்யாகாவாசனம், பஞ்சகவ்ய பூஜை, பக்தர்கள் சங்கல்பம், யாக பூஜைகளும், 8:00 மணிக்கு விநாயகர், கருப்பணசுவாமி, ஐயப் பனுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெறும். இதைதொடர்ந்து கலசாபிஷேகம் நடந்து யானை வாகனத்தில் சுவாமி வைகையாற்றுக்கு சென்று காலை 10:00 மணிக்கு சிறப்பு அபி ஷேகத்துடன் ஆராட்டு விழா நடைபெறும். இதைதொடர்ந்து அன்னதானம், மாலை 4:30 மணிக்கு சுவாமி வீதிஉலா நடைபெறும். தென்கரை ஐயப்ப பக்தர்கள் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி