உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  சீல் நடவடிக்கையால் 2 தரப்பினர் வாக்குவாதம்

 சீல் நடவடிக்கையால் 2 தரப்பினர் வாக்குவாதம்

திருமங்கலம்: திருமங்கலம் - உசிலம்பட்டி ரோட்டில் செங்குளம் அருகே தனியார் மகால் உள்ளது. இரண்டு ஆண்டுகளாக இந்த மகால் இயங்கி வருகிறது. அனுமதி பெற்ற அளவைவிட கூடுதலாக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி நேற்று நகராட்சி ஆணையாளர் அசோக் குமார் தலைமையில் அலுவலர்கள் சீல் வைக்க சென்றனர். மண்டப உரிமையாளர் டாக்டர் ராம்குமார், 'சீல்' வைக்க தடை உத்தரவு வாங்கி இருப்பதாக கூறினார். இதனால் அலுவலர்களுக்கும், மண்டப உரிமையாளரின் வக்கீல்கள், பணியாளர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தடை உத்தரவு ஆன்லைனில் பெறப்பட்டதால் அதில் நீதிமன்ற 'சீல்', கையொப்பம் இல்லை. இதனால் 2 மணி நேரம் வாக்குவாதம் நடந்த நிலையில் நகராட்சி அலுவலர்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை