உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  கிணறைத் தேடும் கிராம மக்கள்

 கிணறைத் தேடும் கிராம மக்கள்

திருமங்கலம்: திருமங்கலம் அருகே சித்தாலையில் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத கிணறை காணாமல் பொதுமக்கள் தேடி அலைகின்றனர். திருமங்கலம் அருகே சித்தாலையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக 80 அடி ஆழத்தில் செவ்வக வடிவ கிணறு இருந்தது. 1973 ல் அப்போதைய மதுரை கலெக்டர் நடராஜன் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இக்கிணறை திறந்து வைத்தார். காலப்போக்கில் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க மின்சார மோட்டார் பொருத்தப்பட்டது. தண்ணீர் தொட்டியும் அமைத்தனர். நாளடைவில் மோட்டார் பழுதடைந்து, தண்ணீர் தொட்டியும் இடிந்தது. இந்நிலையில் பொதுமக்களும் தண்ணீருக்காக வேறு ஆதாரங்களை தேடிக்கொண்டனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தியவர்கள் கிணறை ஆக்கிரமித்து அதை மூடி பேவர் பிளாக் கற்களால் தளம் அமைத்து விட்டனர். கிணறு இருந்த ஆதாரமாக, அக்கிணற்றில் ஏற்றம் போட்டு தண்ணீர் எடுப்பதற்காக, நடப்பட்டு இருந்த கல்துாண் மட்டுமே உள்ளது. வடிவேல் பட பாணியில் கிணற்றை காணாமல் கிராம மக்கள் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி