உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  விவேகானந்தர் பக்தர்கள்  மாநாட்டு முகூர்த்தக்கால்

 விவேகானந்தர் பக்தர்கள்  மாநாட்டு முகூர்த்தக்கால்

எழுமலை: ராமகிருஷ்ணர்-சாரதாதேவி, விவேகானந்தர் பக்தர்களின் 33 வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டு பணிகளுக்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. எழுமலை பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வரும் டிச.26,27, 28 ஆகிய 3 நாட்கள் இம்மாநாடு நடக்கிறது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும்ஆன்மிக பெரியோர்களின் சொற்பொழிவுகள், பஜனை உள்ளிட்டவை நடைபெறும். இதற்கான முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று நடந்தது. ராமகிருஷ்ண மடங்களின் தலைவர்கள் மயிலாப்பூர் சத்யஞானானந்தர், காஞ்சிபுரம் தியாகராஜானந்தர், ராமநாதபுரம் சுதபானந்தர், நாட்ராம்பள்ளி சமாஷிதானந்தர், மதுரை நித்யதீபானந்தர், எழுமலை சிவானந்தர், தேனி வேதபுரீ ஞானசிவானந்தர், மற்றும் எழுமலை நிர்வாகிகள் பொன்கருணாநிதி, பெருமாள் பங்கேற்றனர். மூன்று நாட்கள் நடக்கும் மாநாட்டில் மூவரின் பக்தர்களும் பங்கேற் கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை