தந்தை குத்தி கொலை மகன் கைது
மயிலாடுதுறை:தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை அருகே மேலபாதி கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார், 48. கீழையூர் பகுதியில் கரும்பு ஜூஸ் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு ஜெயசெல்வி, ரேவதி ஆகிய இரு மனைவியர் உள்ளனர். நேற்று சிவகுமார் கரும்பு ஜூஸ் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, முதல் மனைவியின் மகன் அபினேஷ், 25, தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். கொடுக்க மறுத்ததால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அபினேஷ், ஜூஸ் கடையில் இருந்த கத்தியை எடுத்து சிவகுமாரை குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். செம்பனார்கோவில் போலீசார், சிவகுமாரின் உடலை கைப்பற்றி, அபினேஷை கைது செய்தனர்.