மேலும் செய்திகள்
போக்சோவில் கைதான போலீஸ்காரர் டிஸ்மிஸ்
20-Nov-2025
நாகப்பட்டினம்:நாகை அடுத்த நாகூரை சேர்ந்தவர் தாவூது பாத்திமா நாச்சியார், 62. இவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். நால்வரும் திருமணமாகி வெளி நாட்டில் வசிக்கின்றனர். தாய் அலி அகமது நாச்சியார், 85, என்பவருடன் இவர் வசித்தார்.கடந்த, 3ம் தேதி வீட்டை பூட்டி நாகூரில் வேறு பகுதியில் வசிக்கும் தன் தம்பி மகன் அப்துல் வாஹித் வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று மதியம் வீட்டின் வாசல் கதவு திறந்து கிடப்பதாக கிடைத்த தகவலால், நாச்சியார் சென்று பார்த்த போது, நான்கு பீரோக்கள் உடைந்து கிடந்தன. அவற்றில் வைத்திருந்த 110 சவரன் நகைகள் கொள்ளை போயிருந்தது. டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் மற்றும் நாகூர் போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்து, அப்பகுதி கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
20-Nov-2025