உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பா.ஜ., சார்பில் ஒண்டிவீரன் நினைவு தினம் அனுசரிப்பு

பா.ஜ., சார்பில் ஒண்டிவீரன் நினைவு தினம் அனுசரிப்பு

நாமக்கல், ஆக. 21-கிழக்கு மாவட்ட, பா.ஜ., சார்பில், சுதந்திர போரட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினம், நாமக்கல்லில் அனுசரிக்கப்பட்டது. நாமக்கல் மணிக்கூண்டு அருகே நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராம்குமார், நகர தலைவர் சரவணன், மாவட்ட பொதுச்செயலாளர் முத்துக்குமார், செயலாளர் தமிழரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் துரைசாமி பங்கேற்று, ஒண்டிவீரன் படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் மனோகரன், மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை