உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வெற்றி விநாயகா இன்ஜி., கல்லூரியில் பயிற்சி முகாம்

வெற்றி விநாயகா இன்ஜி., கல்லூரியில் பயிற்சி முகாம்

நாமக்கல் : தோளூர்பட்டி வெற்றி விநாயகா இன்ஜினியரிங் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில், 'ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி முகாம்' கல்லூரி வளாகத்தில் நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜூ தலைமை வகித்து, முகாமை துவக்கி வைத்து பேசினார். மின்னணுவியல் மற்றும் தொலை தொடர்பியல் துறைத்தலைவர் அசோக் வரவேற்றார். இயந்திரவியல் துறைத்தலைவர் வேல்மணிராஜன், பயிற்சியாளர் பரத் சவுக்லேவை அறிமுகம் செய்து வைத்தார். இன்றைய மாணவர்களின் உளவியல் பற்றியும், அவர்களை ஆசிரியர்கள் எவ்வாறு அணுகி, திறமை மிக்க இன்ஜினியர்களாக உருவாக்குவது குறித்தும், ஆசிரியர்-மாணவரிடையே தகவல் பரிமாற்றம் பற்றியும் விரிவாக பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்