உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சுப்ரமணிய சுவாமி கோவில் தேர் திருவிழா கோலாகலம்

சுப்ரமணிய சுவாமி கோவில் தேர் திருவிழா கோலாகலம்

சுப்ரமணிய சுவாமி கோவில் தேர் திருவிழா கோலாகலம் மல்லசமுத்திரம், மல்லசமுத்திரம் அருகே, வையப்பமலை மலைக்குன்றின் மீது பழமை வாய்ந்த சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, தேர் திருவிழா வெகுவிமர்சையாக நடப்பது வழக்கம்.அதன்படி, நேற்று காலை, 9:00 மணிக்கு, விநாயகர் திருத்தேர் மலையை சுற்றி பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. மாலை, 4:30 மணிக்கு, சுப்ரமணிய சுவாமி தேரை, 'அரோகரா கோஷம்' முழங்க பக்தர்கள் மலையை சுற்றி இழுத்து வந்தனர். மாலை, 6:45 மணிக்கு, தேர் நிலையை சேர்ந்தது. இன்று இரவு, 8:00 மணிக்கு, சத்தாபரண மகாமேரு நிகழ்ச்சி நடக்கிறது. நாளை காலை, 6:00 மணி முதல் மாலை வரை மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது. விழாவை முன்னிட்டு, தினவும் இரவு சுவாமிக்கு ஒவ்வொரு மண்டல அறக்கட்டளை சார்பில், சிறப்பு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை, பரம்பரை அறங்காவலர் நந்தகுமார் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை