உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாணவிக்கு பாலியல் தொந்தரவு தறித்தொழிலாளிக்கு 6 ஆண்டு சிறை

மாணவிக்கு பாலியல் தொந்தரவு தறித்தொழிலாளிக்கு 6 ஆண்டு சிறை

நாமக்கல்: பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், தறி தொழிலாளிக்கு, 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து, நாமக்கல் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அடுத்த மோடமங்கலம் வால்ராசாம்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ், 42; தறித்தொழிலாளி. இவர், 2021 டிச., 6ல், அவரது மகளுடன் படித்தும் வரும், 7ம் வகுப்பு மாணவி ஒருவர் வீட்டிற்கு நோட்டு வாங்க சென்றுள்ளார். அப்போது, அங்கு தனியாக இருந்த மாணவிக்கு, வெங்கடேஷ் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர், திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகார்படி, வெங்கடேஷை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.இந்த வழக்கு, நாமக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கு விசாரணை முடிந்து, நீதிபதி முனுசாமி, நேற்று தீர்ப்பளித்தார். அதில், குற்றம்சாட்டப்பட்ட வெங்கடேசிற்கு, 6 ஆண்டு சிறை தண்டனை, 1,000 ரூபாய் அபராதம் விதித்தார். இதையடுத்து, சேலம் மத்திய சிறையில், வெங்கடேஷ் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ