உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கள்ளச்சாராய விழிப்புணர்வு

கள்ளச்சாராய விழிப்புணர்வு

சேந்தமங்கலம்: கொல்லிமலையில் முற்றிலும் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தும் வகையில், நேற்று கொல்லிமலை, 'வல்வில் ஓரி' அரங்கில், முன்னாள் கள்ளச்சாராய குற்றவாளிகள், அவரது குடும்பத்தினருக்-கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.சேந்தமங்கலம் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வரவேற்றார். மதுவி-லக்கு பிரிவு டி.எஸ்.பி., தனராசு, எஸ்.பி., ராஜேஷ்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில், சேலம் சரக டி.ஐ.ஜி., உமா, காள்ளச்சாராயம் காய்ச்சு-வதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் குறித்தும் மலைவாழ் மக்களிடம் எடுத்-துரைத்தார். தொடர்ந்து, மலைவாழ் மக்கள் சாராயம் காய்ச்ச மாட்டோம் என, உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ