உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டூவீலரில் இருந்து விழுந்தவர் லாரியில் சிக்கி படுகாயம்

டூவீலரில் இருந்து விழுந்தவர் லாரியில் சிக்கி படுகாயம்

குமாரபாளையம், ஆஈரோடு மாவட்டம், பவானி அருகே செங்காடு பகுதியை சேர்ந்தவர் செல்வகுமாரன், 25. குமாரபாளையம் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மதியம், 1:30 மணிக்கு உணவு அருந்த டூவீலரில், குமாரபாளையத்தில் இருந்து, இடைப்பாடி செல்லும் சாலையில், சின்னப்ப நாயக்கன்பாளையம் வாரச்சந்தை பஸ் நிறுத்தம் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.அப்போது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க, பிரேக் பிடித்ததில், நிலை தடுமாறி கீழே விழுந்தார். அந்த சமயத்தில், பின்னால் வந்த லாரியின் சக்கரத்தில் சிக்கினார். இதில் அவரது இடது கை மீது, லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் கை சேதமடைந்தது. மேலும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி