உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மலைவாழ் மக்கள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

மலைவாழ் மக்கள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

சேந்தமங்கலம் : தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில், கொல்லிமலை செம்மேட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் மாணிக்கம் தலைமை வகித்தார். தொழிற்சங்க மாவட்ட தலைவர் அசோகன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார்.இதில், கொல்லிமலை மலைவாழ் மக்களுக்கு தடையின்றி ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும். வேளாண்மை, தேட்டக்கலைத்துறை ஸ்பைசிஸ் போர்டு, காபி போர்டுகளில் நடக்கும் இடைத்தரகர்களை தடுக்க வேண்டும். கொல்லிமலை முழுவதும் சென்று வர பஸ் வசதி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி