உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ராசிபுரம் மனநல காப்பகத்தில் மோதல் கொடுமுடி ஆசாமி சாவால் பரபரப்பு

ராசிபுரம் மனநல காப்பகத்தில் மோதல் கொடுமுடி ஆசாமி சாவால் பரபரப்பு

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், காட்டூர் சாலையில், 'அணைக்கும் கரங்கள்' என்ற மனநல காப்பகம், 26 ஆண்டுகளாக செயல்படுகிறது. ஜாய், 52, நிர்வகித்து வருகிறார். இங்கு, 30 குழந்தைகள் உள்பட, 60க்கும் மேற்பட்டோர் பராமரிப்பில் உள்-ளனர்.காப்பகத்தில் இருந்த ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்-தவர் தங்கராஜ், 58; தஞ்சாவூரை சேர்ந்தவர் கைரூல் ஆஸ்மிக், 45; இருவருக்கும் நேற்று காலை தகராறு ஏற்பட்டது. இருவரும் தாக்கிக் கொண்டதில், கீழே விழுந்த தங்கராஜ், தலையில் பலத்த காயமடைந்தார். காப்பக பணியாளர்கள் மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோத-னையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. ராசிபுரம் டி.எஸ்.பி., விஜயகுமார் மற்றும் போலீசார், காப்பகத்துக்கு சென்று விசாரித்தனர்.அனைவரையும் தாக்கும் சுபாவம் கொண்ட தங்கராஜ், கைரூல் ஆஸ்மிக்கை தாக்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக விழுந்ததில் தலையில் காயமடைந்து இறந்திருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது-குறித்து ராசிபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை