உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சாலை விபத்தில் வாலிபர் பலி

சாலை விபத்தில் வாலிபர் பலி

ராசிபுரம்;சேலம் மாவட்டம், பொன்னம்மாபேட்டை வாய்க்கால் பட்டறை பகுதியை சேர்ந்த சிவா மகன் விஜய், 25. இவருக்கு திருமணமாகி, மூன்று மாதங்களே ஆகிறது.இந்நிலையில், நேற்று இரவு, டூவீலரில் பொன்னம்மாபேட்டை பகுதியில் இருந்து ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகலுார் கேட் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த டிராக்டர் மோதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ராசிபுரம் போலீசார் விசாரணை நடத்தி, விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் டிரைவரான, சேந்தமங்கலத்தை சேர்ந்த மணிகண்டனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை