உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / எக்ஸல் வணிகவியல் கல்லுாரியில் தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

எக்ஸல் வணிகவியல் கல்லுாரியில் தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

குமாரபாளையம்: குமாரபாளையம் எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்-லுாரியில், துணைத்தலைவர் மதன்கார்த்திக் வழிகாட்டுதல்படி, நுண்ணுயிரியல் துறை சார்பில், 'நுண்ணுயிரியல் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள்' என்ற தலைப்பில், தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் விமல்நிஷாந், ஐ.கியூ.ஏ.சி., உள்தர மதிப்பீட்டு பிரிவின் சிறப்பு ஒருங்கிணைப்பாளர் சங்கர் ஆகியோர் தலைமை வகித்தனர். திட்ட தலைவர் மஞ்சுளா முன்-னிலை வகித்தார்.மதுரை அமெரிக்கன் கல்லுாரியை சேர்ந்த நுண்ணுயிரியல் துறைத்தலைவர் ஆண்ட்ரு பிரதீப், சிறப்பு விருந்தினராக கலந்து-கொண்டு, நுண்ணுயிரியல் துறையில் மாணவர்களுக்கு அரசாங்க மற்றும் தனியார் துறைகளில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தார். மேலும், சி.எஸ்.ஐ.ஆர்., - யு.ஜி.சி., நெட் - கியூட் - ஐ.சி.எம்.ஆர்., நெட் போன்ற பொது தேர்வுகள் மற்றும் ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., - என்.ஐ.டி., - ஐ.ஐ.டி., போன்ற மையங்-களில் வழங்கப்படும் பயிற்சி திட்டங்கள் குறித்து விளக்கி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, நுண்ணுயிரியல் துறை தலைவர் ரம்யா, நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் செய்திருந்-தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை