| ADDED : ஆக 04, 2024 03:41 AM
சேலம்: சேலம், அம்மாபேட்டை, காமராஜர் காலனியை சேர்ந்தவர் பூங்-கொடி, 37; 'நர்சிங்' படித்துள்ள இவர், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், 'அரசு பள்-ளியில் ஆய்வக டெக்னிக்கல் பிரிவில் வேலை உள்ளதாக, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, மாவட்ட முதன்மை கல்வி அலுவலக கண்காணிப்பாளர் தமிழரசன், 59, கூறினார்.வேலை வாங்கி தருவதாக, 2022ல், 15 லட்சம் ரூபாய் வாங்-கினார். வேலை வாங்கி தராத நிலையில் பணத்தை கேட்டதால், ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்தார். அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும்' என கூறியிருந்தார்.போலீசார் நடவடிக்கை எடுக்காததால், சென்னை உயர்நீதிமன்-றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி, சம்பந்தப்-பட்டவர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க உத்தர-விட்டார். இதன்படி அஸ்தம்பட்டி போலீசார், தமிழரசன் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.