உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பளு துாக்கும் வீராங்கனைக்கு நிதியுதவி வழங்கி பாராட்டு

பளு துாக்கும் வீராங்கனைக்கு நிதியுதவி வழங்கி பாராட்டு

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, பெரியார் நகரை சேர்ந்தவர் செல்வம், 45; விசைத்தறி தொழிலாளி. இவரது மகள் தேன்மொழி, 20, கல்லுாரி இரண்டாமாண்டு படித்து வருகிறார். இவர், திருச்செங்கோட்டில் நடந்த பளு துாக்கும் போட்டியில், 63 கிலோ எடைப்பிரிவில், 412.5 கிலோ துாக்கி முதலிடம் பிடித்தார். இதையடுத்து, வரும், 16ல் பஞ்சாபில் நடக்கும் நேஷனல் பவர் லிப்டிங் சாம்பியன் போட்டியில், தேன்மொழி பங்கேற்க உள்ளார். இந்நிலையில், பள்ளிப்பாளையம் நகராட்சி தலைவர் செல்வராஜ் நேரில் அழைத்து பாராட்டி, நிதியுதவி வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ