உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மோகனுார் காவிரி கரையோரம் தீ விபத்து

மோகனுார் காவிரி கரையோரம் தீ விபத்து

மோகனுார்: மோகனுார் காவிரி கரையோரம், பிரசித்தி பெற்ற அசலதீபேஸ்-வரர் கோவில் உள்ளது. இதன் அருகே உள்ள காவிரி ஆற்று படிக்கட்டு துறை அருகில், குவிக்கப்பட்டிருந்த குப்பைகளில் நேற்று இரவு, 7:00 மணிக்கு தீ பற்றியது.காற்றின் வேகம் அதிகமாக அடித்த நிலையில், அருகில் இருந்த தென்னை மரம், வயல்வெளிகளிலும் தீ மளமளவென பரவி-யது. நாமக்கல் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைக்க முயன்றனர். இரண்டு வாகனங்களில் வந்து தீயை அணைத்-தாலும், காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீயை கட்-டுக்குள் கொண்டு வர முடியவில்லை. மேலும் பல இடங்களில் வாகனங்கள் உள்ளே செல்ல போதிய இட வசதி இல்லை. பின்னர், ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இரவு, 10:00 மணி வரை தீயை கட்டுக்குள் கொண்டு வர வீரர்கள் போராடி வந்தனர். இரவு நேரம் என்பதால் சேதாரம் குறித்த தகவல் தெரியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை