உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆற்றோரத்தில் விடுபட்டவர்களுக்கும் பட்டா வழங்கினால் வெள்ள பாதிப்பு தவிர்க்கப்படும்

ஆற்றோரத்தில் விடுபட்டவர்களுக்கும் பட்டா வழங்கினால் வெள்ள பாதிப்பு தவிர்க்கப்படும்

பள்ளிப்பாளையம், ''பள்ளிப்பாளையம் ஆற்றோரத்தில் விடுபட்டவர்களுக்கும் பட்டா வழங்கினால், வெள்ள பாதிப்பு முற்றிலும் தவிர்க்கப்படும்,'' என, முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறினார்.காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் ஆற்றோரத்தில் உள்ள ஏராளமான வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான தங்கமணி, ஆற்றோரத்தில் பாதிப்பு இடங்களை பார்வையிட்டு, மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து, தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றார்.பின்னர், தங்கமணி நிருபர்களிடம் கூறியதாவது:பள்ளிப்பாளையம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில், 1,200 பேருக்கு பட்டா கொடுத்தோம். பட்டா பெற்றவர்கள் அந்தந்த பகுதிக்கு சென்று விட்டனர். விடுபட்டவர்கள், 50 பேர் தான் இருப்பர், இந்த அரசு கணக்கெடுப்பு நடத்தி அவர்களுக்கும் பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு செய்தால் எந்த பிரச்னையும் வராது. பட்டா கொடுத்தால், முழுமையாக ஆற்றோரத்தில் உள்ளவர்கள் வெளியேறி விடுவர். வெள்ளம் பாதிப்பு ஏற்படாது. இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் பேசி உள்ளேன்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி