உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அரசு வேலைவாங்கி தருவதாக கூறி ரூ.35.75 லட்சம் மோசடி

அரசு வேலைவாங்கி தருவதாக கூறி ரூ.35.75 லட்சம் மோசடி

நாமக்கல் : சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தில், வேலை வாங்கித் தருவ-தாக கூறி, 35.75 லட்சம் ரூபாய் மோசடி செய்த, ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர் மீது, குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அடுத்த ஆனங்கூரை சேர்ந்தவர் பழனிசாமி, 75. இவரது மகன் கோபிநாத், 25. எம்.பி.ஏ., பட்டதாரியான இவர் வேலை தேடிக் கொண்டி-ருந்தார். இந்நிலையில், பழனிசாமியின் நண்பர் ராஜேந்திரன் மூலம், கும்பகோணத்தை சேர்ந்த வரதராஜன், 62, என்பவர் அறி-முகமானார். இவர், ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியராக பணி-யாற்றியவர். சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தில் வேலை வாங்கித்தருதாக இவர் உறுதி அளித்தார். அதையடுத்து வரதராஜ-னிடம், பழனிசாமி, 35.75 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால், சொன்னபடி வேலை வாங்கித் தரவில்லை. வரதரா-ஜனை பலமுறை தொடர்பு கொண்டும், வேலை வாங்கித் தராத-துடன், கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை. அதனால், தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த பழனிசாமி, இது குறித்து, நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். மோசடி பேர்வழி வரதராஜன், ஏற்கனவே மற்றொரு மோசடி வழக்கில் சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி