உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆடு திருடியதாக தாக்கி பலியான வழக்கு: மேலும் 3 பேர் கைது

ஆடு திருடியதாக தாக்கி பலியான வழக்கு: மேலும் 3 பேர் கைது

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, கடந்த, 4ல் ஆடு திருட வந்தவர்கள் என, நினைத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள், இரண்டு பேரையும் கடுமையாக தாக்கினர். இதில், படுகாயமடைந்த இருவரும், ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அதில், ஆவத்திபாளையத்தை சேர்ந்த ராஜ்குமார், 32, என்பவர், கடந்த, 8ல் உயிரிழந்தார். பள்ளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோளகவுண்டம்பாளையத்தை சேர்ந்த, ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக இருந்தவர்களை தேடி வந்தனர்.இந்நிலையில், மோளகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த சேகர், 39, முத்துசாமி, 40, விஜயகுமார், 38, ஆகிய, 3 பேரை பள்ளிப்பாளையம் போலீசார், நேற்று கைது செய்தனர். இந்த வழக்கில் இதுவரை, 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், சிலரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை