மேலும் செய்திகள்
ரூ.24 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம்
08-Oct-2025
தொடர் மழையால் மஞ்சள் ஏலம் ரத்து
08-Oct-2025
மயங்கி விழுந்த மூதாட்டி பலி
08-Oct-2025
திருச்செங்கோடு: திருச்செங்கோடு அடுத்துள்ள மோர்பாளையத்தில், வெள்ளிக்கிழமை தோறும், அதிகாலை, 3:00 முதல், 8:00 மணி வரை கால்நடைச்சந்தை நடக்கிறது. இங்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகளும், வியாபாரிகளும் ஆடு, மாடுகளை வாங்கவும், விற்கவும் வருகின்றனர். மேலும், கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களிலிருந்தும் கால்நடைகளை வாங்க வருகின்றனர். இந்நிலையில், பக்ரீத் பண்டிகை, வரும், 17ல் கொண்டாடப்பட உள்ளது. இன்னும், இரண்டு நாட்களே உள்ளதால், ஆடுகள் வரத்தும், விற்பனையும் அதிகரித்துள்ளது.குரும்பாடு, வெள்ளாடு, செம்மறியாடு உள்ளிட்ட பல்வேறு வகையான ஆடுகளை விற்பனைக்காக விவசாயிகள் இந்த சந்தைக்கு கொண்டு வந்தனர். 2,000 முதல், 40,000 ரூபாய் வரையிலான ஆடுகள், இந்த சந்தையில் விற்பனை செய்யப்பட்டது. பக்ரீத் பண்டிகையையொட்டி நடப்பதால், இந்த வாரம் மட்டும், 4 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
08-Oct-2025
08-Oct-2025
08-Oct-2025