நாமக்கல்: ''கல்லுாரி மணவர்களிடையே, தமிழ் கற்கும் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும்,'' என, தமிழ்-நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை துணை வேந்தர் செல்வகுமார் பேசினார்.தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்-கலையின் உறுப்பு கல்லுாரியான, நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு அறிவியல் தமிழ் இயக்கம் சார்பில், கால்நடை அறிவியல் தமிழை ஊக்கு-விக்கும் வகையில், தேசிய அளவிலான 'கால்ந-டைகளின் நலம் விவசாயிகளின் வளம்' என்ற தலைப்பில், இரண்டு நாள் கருத்தரங்கு நடந்தது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்-கலை துணைவேந்தர் செல்வகுமார் தலைமை வகித்து, சிறந்த நுால் மற்றும் சிறந்த பொதுக்கட்-டுரை ஆசிரியர்களை கவுரவித்து விருது வழங்கி, 'கல்லுாரி மணவர்களிடயே தமிழ் கற்கும் ஆர்-வத்தை ஊக்குவிக்க வேண்டும்' என்றார்.வேலுார் மாவட்டம், திருவள்ளுவர் பல்கலை துணைவேந்தர் ஆறுமுகம், வாழ்நாள் சாதனை-யாளர் மற்றும் முன்னவர் விருதுகளை வழங்-கினார். கால்நடை அறிவியல் தமிழ் இயக்க தலைவர் ரவிமுருகன், இயக்கத்தின் துவக்கம், கடந்து வந்த பாதை, குறிக்கோள்கள் குறித்து விளக்கினார். கால்நடை அறிவியல் தமிழ் இயக்-கத்தின் பொதுச்செயலாளர் குமாரவேலு, தமிழ் மொழியின் சிறப்பை விவரித்து வாழ்த்துரை வழங்கினார். கல்லுாரி முதல்வர் செல்வராஜூ வரவேற்றார்.'தமிழ்வழி ஆராய்ச்சிகள்' என்ற தலைப்பில், ஆறு தலைப்புகளில் மூத்த தமிழ் ஆர்வலர்களால் சிறப்பு அமர்வு நடந்தது. அதில், மொத்தம், 180க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் பங்-கேற்று, தமது ஆராய்ச்சிகளின் முடிவுகளை, தமிழில் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில், 8 அமர்வுகளில் விவரித்த கட்டுரைகள், கருத்த-ரங்கு இதழாக வெளியிடப்பட்டது.பல்கலை முன்னாள் துணைவேந்தர் பிரபாகரன் கலந்து கொண்டு, விருது வழங்கி பேசினார். துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.