உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / போதையில் போலீசாரை தாக்க முயன்றவர் கைது

போதையில் போலீசாரை தாக்க முயன்றவர் கைது

ப.வேலுார்:ப.வேலுார், பள்ளி சாலையில், நேற்று முன்தினம் மாலை, டிராபிக் இன்ஸ்பெக்டர் ஷாஜகான், எஸ்.ஐ.,க்கள் ஆனந்தன், சுப்பிரமணி ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது டூவீலரில் சென்ற நபரை நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில், நாமக்கல் வள்ளிபுரம், கோணாம்பரப்பு பகுதியை சேர்ந்த வீரமணி, கோழிப்பண்ணையில் வேலை செய்து வருவது தெரியவந்தது.குடிபோதையில் இருந்த வீரமணி, போலீசாரிடம் தரக்குறைவாக பேசி தாக்க முயன்றுள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரை தரக்குறைவாக பேசியதாலும், பணி செய்யவிடாமல் தடுத்ததாலும், வழக்குப்பதிவு செய்து வீரமணியை ப.வேலுார் போலீசார் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை