உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குடியிருப்பு பகுதியில் கொசு மருந்து அடிப்பு

குடியிருப்பு பகுதியில் கொசு மருந்து அடிப்பு

பள்ளிப்பாளையம், ஆலாம்பாளையம் டவுன் பஞ்., குடியிருப்பு பகுதியில், கொசு மருந்து அடிக்கப்பட்டது.பள்ளிப்பாளையம் அருகேயுள்ள, ஆலாம்பாளைளயம் டவுன் பஞ்சாயத்தில், 15 வார்டுகள் உள்ளது. அனைத்து வார்டுகளிலும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில், கடந்த இரண்டு வாரங்களாக கொசு தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக குடியிருப்பு பகுதியில் செல்லும் சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யப்பட்டது. பின், வாகனத்தின் மூலம் கொசு மருந்து குடியிருப்பு பகுதி முழுவதும் அடிக்கப்பட்டு, சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை