உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அதிகளவில் மது அருந்திய பெயின்டர் மரணம்

அதிகளவில் மது அருந்திய பெயின்டர் மரணம்

மல்லசமுத்திரம், மல்லசமுத்திரம் அருகே, பிள்ளாநத்தம் கிராமம், காத்தான்காடு பகுதியை சேர்ந்தவர் துரையான், 52. பெயின்டர். நேற்று முன்தினம் மதியம், 12:00 மணிக்கு, மோர்பாளையம் டாஸ்மாக் கடையில் அதிகளவில் மது அருந்தியதால், போதை தலைக்கேறி கீழேவிழுந்துள்ளார். மாலை, 4:00 மணிக்கு வாயில் ஈக்கள் மொய்த்துள்ளது. அருகிலிருந்தவர்கள் சந்தேககமடைந்து எழுப்புகையில் மூச்சு இல்லாமல் உயிரற்ற நிலையில் கிடந்துள்ளார். மல்லசமுத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இவருக்கு சிவகாமி, 45, மாதேஸ்வரி, 45, என இரு மனைவிகள் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ