உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தமிழக மக்கள் கோவிலுக்கும் செல்வார்கள் தி.மு.க., மாநாட்டிற்கும் செல்வார்கள்: வைகோ

தமிழக மக்கள் கோவிலுக்கும் செல்வார்கள் தி.மு.க., மாநாட்டிற்கும் செல்வார்கள்: வைகோ

குமாரபாளையம்;''தமிழக மக்கள் கோவிலுக்கும் செல்வார்கள்; தி.மு.க., மாநாட்டிற்கும் செல்வார்கள்,'' என, குமாரபாளையத்தில் நடந்த பிரசாரத்தில், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேசினார்.ஈரோடு லோக்சபா தொகுதி, தி.மு.க., வேட்பாளர் பிரகாசை ஆதரித்து, நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில், ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ பிரசாரத்தில் ஈடுபட்டார்.அப்போது அவர் பேசியதாவது: பிரதமர் மோடி, ஏதோ பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுவது போல், வீதி, வீதியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பல பிரதமர்களுடன் நெருங்கி பழகியவன் நான். பிரதமராக இருப்பவர் யாரையும் மதிக்க கூடியவர்களாக இருக்க வேண்டும். இந்த சூழலில், தமிழகத்தில் ரத்தமும், கண்ணீரும் சிந்தி, திராவிட இயக்கத்தை பல தலைவர்கள் காப்பாற்றி உள்ளனர். தி.மு.க.,வில் இருந்து என்னை நீக்கப்பட்ட போதிலும், என்னை வளர்த்த இயக்கம் என்ற எண்ணத்தோடு இருக்கிறேன். பிரதமர் மோடி, தி.மு.க., இயக்கத்தை சாதாரண இயக்கமாக நினைக்க கூடாது. 100 ஆண்டு பாரம்பரியம் மிக்க கட்சியை அழிப்பது தான் பிரதமர் வேலையா?தமிழகத்தில் கோவில்களை பற்றி சொன்னால், பா.ஜ., பின்னால் மக்கள் வந்துவிடுவார்கள் என, மனப்பால் குடிக்கிறது. தமிழக மக்கள் கோவிலுக்கும் செல்வார்கள்; தி.மு.க., மாநாட்டிற்கும் செல்வார்கள்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை