உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குமாரபாளையத்தில் 2 மணி நேரம் மழை

குமாரபாளையத்தில் 2 மணி நேரம் மழை

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், இரண்டு மணி நேரம் வெளுத்து வாங்கிய கன மழையால், வெப்பம் தணிந்து மக்கள் குளிர்ச்சியடைந்தனர்.குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில், நேற்று வெயிலின் தாக்கத்தால் மக்கள் வெளியே வராமல் வீட்டுக்குள் முடங்கி கிடந்தனர். இந்நிலையில், காவேரி நகர், சின்னப்பநாயக்கன்பாளையம், எம்.ஜி.ஆர்., நகர், குப்பாண்டபாளையம், தட்டான் குட்டை, எதிர்மேடு, வளையக்காரனுார் உள்ளிட்ட பகுதிகளில், மாலை, 3:00 மணியளவில் திடீரென கனமழை பெய்தது. இந்த மழை, 2 மணி நேரம் வெளுத்து கட்டியதால், சாலைகளில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கோடை வெயிலின் தாக்கம் குறைந்து, குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மழையின் காரணமாக ஒரு மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ