உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரத்த கொடையாளர் தினத்தில் சிறப்பு ரத்த தான முகாம்

ரத்த கொடையாளர் தினத்தில் சிறப்பு ரத்த தான முகாம்

நாமக்கல் : உலக ரத்த கொடையாளர் தினம், ஜூன், 14ல் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிறப்பு ரத்த தான முகாம், நேற்று நடந்தது. மருத்துவ கல்லுாரி முதல்வர் சாந்தா அருள்மொழி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். பின், ரத்ததானம் வழங்கினார்.அதை தொடர்ந்து, மருத்துவ கல்லுாரி மாணவ, மாணவியர் ரத்த தானம் குறித்த உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். 50 மாணவர்கள் ரத்த தானம் செயதனர். ரத்த தானம் வழங்கிய கொடையாளர்களுக்கு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மருத்துவமனை கண்காணிப்பாளர் குணசேகரன், உள்ளுறை மருத்துவர் கண்ணப்பன், ரத்த வங்கி அலுவலர் அன்பு மலர், ரெட்கிராஸ் மாவட்ட செயலர் ராஜேஸ் கண்ணன் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி