உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / திடீர் குழிக்கு தற்காலிக தடுப்பு

திடீர் குழிக்கு தற்காலிக தடுப்பு

நாமக்கல், நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் ஈரோடு, திருச்சி பஸ்கள் நிற்கும் இடத்தில், நேற்று முன்தினம் காலை திடீரென, 4 அடி அகலம், 6 அடி நீலத்திற்கு குழி ஏற்பட்டது. இதனால், பஸ்சில் ஏறி, இறங்கும் பயணிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது எனவும், குழியை உடனடியாக மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நேற்று நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, நேற்று காலை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் நகராட்சி துாய்மை பணியாளர்கள், இரண்டு பேரிகார்டை எடுத்துவந்து அந்த குழியை மறைத்து வைத்தனர். இதனால், தற்காலிகமாக விபத்து தடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை