உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ராசிபுரத்தில் போக்குவரத்து நெரிசல்

ராசிபுரத்தில் போக்குவரத்து நெரிசல்

ராசிபுரம்: ராசிபுரம் சுற்று வட்டார பகுதியில், 10க்கும் மேற்பட்ட தனியார் கல்லுாரிகள், 20க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் உள்ளன. இதில், கல்லுாரிகள் நகருக்கு வெளியே இருப்பதால் கல்லுாரி வாகனங்கள் பெரும்பாலும் நகருக்கு உள்ளே வருவதில்லை. ஆனால், வெளியூரில் உள்ள கல்லுாரி வாகனங்கள் நகருக்குள் வந்து செல்கின்றன. அதேபோல், பள்ளி வாகனங்கள் அதிகளவு வருகின்றன.காலை நேரத்தில் பள்ளி, கல்லுாரி வாகனங்கள் அதிகளவு வருவதால், ராசிபுரம் ஒருவழிப்பாதையான பூவாயம்மாள் திருமண மண்டபம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.குடியிருப்புகள், கடைகள் இருப்பது மட்டுமின்றி சாலை குறுகலாக இருப்பதால் காலை, மாலை இரண்டு நேரமும் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனால், காலையில் அலுவலகம் செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். போக்குவரத்து போலீசார் இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ