| ADDED : ஜூலை 08, 2024 07:35 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அடுத்த சீராப்பள்ளி சவுடேஸ்வரி அம்மன் கோவில் விழாவில், வீரக்குமாரர்கள் தங்களது உடலில் கத்தி போட்டு ஆடி வந்தனர்.நாமகிரிப்பேட்டை அடுத்த சீராப்பள்ளியில் பிரசித்தி பெற்ற சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. திருவிழாவை முன்னிட்டு, நந்தவனத்தில் இருந்து அம்மனுக்கு சக்தி அழைக்கப்பட்டது. இதில், 100-க்கும் மேற்பட்ட வீரக்குமாரர்கள், கத்தியுடன் நடனமாடி வந்தனர். சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை கத்தியால் தங்கள் கை, மார்பகங்களில் வெட்டிக்கொண்டு அம்மனை அழைத்து சென்றனர். கத்தி போடும்போது மார்பகங்களில் ஏற்படும் காயங்களுக்கு மஞ்சள் பொடி துாவிக்கொள்கின்றனர். மஞ்சள் பொடி துாவினால், 3 நாட்களில் காயம் ஆறிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சுற்றுவட்டார பகுதியில் இருந்து பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் சக்தி அழைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இன்று, மஞ்சள் நீர் ஊர்வலத்துடன் விழா நிறைவடைகிறது.