உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கார் மோதி தொழிலாளி பலி

கார் மோதி தொழிலாளி பலி

பள்ளிப்பாளையம் : தண்ணீர்பந்தல்பாளையம் பகுதியில் கார் மோதிய விபத்தில், டூவீலரில் சென்ற தொழிலாளி பலியானார்.திருச்செங்கோட்டை சேர்ந்தவர் பரமசிவம், 56. இவர், வெப்படை அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு, நேற்று முன்தினம் சென்றார். பின், மாலை, 6:30 மணிக்கு, டூவீலரில் திருச்செங்கோடு நோக்கி சென்றார். தண்ணீர்பந்தல்பாளையம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது, எதிரே வந்த கார் டூவீலர் மீது மோதியது. இதில், பரமசிவம் பலத்த காயம் ஏற்பட்டு, ஆபத்தான நிலையில் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். வெப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ